டெல்லி:நாடு முழுவதும் இன்று தீபாவளி கொண்டாடப்படும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு (அக்டோபர் 30) தனது எக்ஸ் பக்கத்தில் தீபாவளி வாழ்த்துகள் குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த பதிவில் அவர், "ராம் லல்லாவின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு அயோத்தி கோயில் கொண்டாடும் முதல் தீபாவளியாகும்.”
ராமாயண திருநாளில் அயோத்தி ராமர் கோயில்:“இந்த தருணம் 500 ஆண்டுகளுக்கு பின் நமக்கு கிடைத்துள்ளது. இந்த வரலாற்று சிறப்புடைய நாளுக்கு பின் எண்ணற்ற தியாகங்கள் மற்றும் தவங்கள் உள்ளன. இந்த வரலாற்று நிகழ்வில் நாம் அனைவரும் இணைந்திருப்பது நமது பாக்கியம்," எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்தியாவின் வளர்ச்சிக்கு ராமரின் கொள்கை:மேலும் அந்த பதிவில், "அயோத்தி ராமர் கோயில் அறத்தினால் உருவானது. இந்த கோயிலில் வீற்றிருக்கும் ராம் லல்லாவின் தனித்துவமும், அழகும் அனைவரையும் கவரும். இந்தியாவின் வளர்ச்சிக்கு ராமரின் வாழ்க்கையும் அவரது கொள்கையும் மிக பெரிய உத்வேக சக்தியாக உள்ளது. அதுவே தொடரும் என நான் நம்புகிறேன்" என தெரிவித்து இந்திய மக்களுக்கு பிரதமர் மோடி தீபஒளித் திருநாள் வாழ்த்துகளைக் கூறினார். மேலும், அந்த எக்ஸ் பதிவில் ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ராவின் எக்ஸ் பக்கத்தை குறிப்பிட்டிருந்தார்.