மணிப்பூர்:மணிப்பூர் மெய்தேய் இனத்தைச் சேர்ந்த ஆறு பேர் கடந்த நவம்பர் 11ஆம் தேதி (திங்கட்கிழமை) முதல் காணமல் போனதாக வழக்கு பதிவு செய்து, போலீசார் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டிருந்தனர். இந்நிலையில் காணாமல் போனதாக வழக்கு பதிவுச்செய்யப்பட்ட ஆறு பேரில் 3 பேரின் (1 பெண் மற்றும் 2 குழந்தைகள்) உடல் வெள்ளிகிழமை நவ.15ஆம் தேதி இரவு அசாம்-மணிப்பூர் எல்லைக்கு அருகே சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், ஆறு பேரில் மீதமுள்ள 3 பேர் (2 பெண்கள், 1 குழந்தை) மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தின் பராக் நதி கரையில் சடலாமாக சனிக்கிழமை (நவம்பர் 16) மீட்கப்பட்டனர். 6 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அசாமில் உள்ள சில்சார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு (SMCH) அனுப்பி வைக்கப்பட்டன. இதனால் மணிப்பூர், இம்பால் தலைநகரில் பெரும் பதற்றமான சூழல் நிலவியது.
இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த மெய்தேய் மக்கள் மணிப்பூர் சட்டப்பேரவை மாளிகையில் இருந்து 200 மீட்டர் தொலைவில் இருந்த இம்பால் நகரின் தங்க்மெய்பண்ட் பகுதியில் சாலையின் நடுவில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அந்த போரட்டத்தின் போது திடீரென போராட்டகாரர்களுக்கும், ஜிரிபாம் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்த நிலையில், அந்த பகுதியை சேர்ந்த 10 குகி-ஸோ இன இளைஞர்கள் கொல்லப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டது.
இந்த சம்பவத்தால் மணிப்பூரில் மேலும் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் இச்சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சபம் ரஞ்சன் கூறியதாவது, “இந்த விவகாரம் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும். பொதுமக்களின் உணர்வுகளுக்கு அரசு எப்போதும் மதிப்பளிக்கும். இந்த வாக்குறுதி தவறினால் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்,” எனக் குறிப்பிட்டிருந்தார்.