ETV Bharat / bharat

நம்பகத்தன்மைக்கு மாறாக செயல்படுகிறார்...தேர்தல் ஆணையருக்கு எதிராக கெஜ்ரிவால் கொந்தளிப்பு! - ECI VS ARAVIND KEJRIWAL

தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை சீரழிக்கும் வகையில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் செயல்படுவதாக ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால், தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார்
அரவிந்த் கெஜ்ரிவால், தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் (Image credits-ANI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 30, 2025, 7:27 PM IST

புதுடெல்லி: டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை சீரழிக்கும் வகையில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் செயல்படுகிறார் என குற்றம் சாட்டியுள்ளார்.

மக்களின் உயிரோடு விளையாடுகின்றனர்: டெல்லி சட்டப் பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி வழியாக செல்லும் யமுனை நதியில் ஹரியானாவில் விஷம் கலக்கப்படுவதாக குற்றச்சாட்டு கூறியிருந்தார். இது குறித்து டெல்லி பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி, "ஹரியானா மக்களை அவமானப்படுத்தும் வகையில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகிறார்,"என கூறியிருந்தார்.

இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், "தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை சீரழிக்கும் வகையில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் செயல்படுகிறார். ஓய்வுக்குப் பின்னர் மத்திய அரசில் உயர் பதவி கிடைக்கும் என்பதால் மத்திய பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார். டெல்லி மக்களின் வாழ்க்கையில் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் விளையாடுகின்றன. யமுனை நதியின் அமோனியா கலந்த தண்ணீரை பாஜக, காங்கிரஸ் தலைவர்கள் குடிக்க முன் வருவார்களா?

ஆம் ஆத்மியின் எம்பி சஞ்சய் சிங் ஒரு பாட்டிலில் யமுனை நதி தண்ணீரை எடுத்துக் கொண்டு உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சஜ்தேவா, ஹரியானா முதலமைச்சர் நயாப் சைனி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சென்று சந்திப்பார். அந்த தண்ணீர் விஷதன்மை இல்லையென்று அவர்கள் கருதினால், அதனை அவர்கள் தைரியமாக குடிப்பார்களா?

தேர்தலில் போட்டியிடலாம்: ராஜிவ் குமாரைப் போல வேறு யாரும் இது போல தேர்தல் ஆணையத்தை சீரழிக்க முடியாது. அவர் விரும்பினால், டெல்லியில் உள்ள ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடலாம். நான் உயிரோடு இருக்கும் வரை விஷம் கலந்த நீரை டெல்லி மக்கள் குடிப்பதை நான் அனுமதிக்க மாட்டேன். இன்னும் இரண்டு நாட்களில் அவர்கள் என்னை கைது செய்வார்கள் என்பது எனக்குத் தெரியும். அதற்காக நான் பயப்படவில்லை. ஹரியானா முதலமைச்சர் சைனி நேற்று கூறும் போது, அனைவரின் முன்னிலையில் யமுனை நதியின் தண்ணீரை குடிப்பதாக கூறினார். ஆனால், பல்லா சென்ற அவர் யமுனை நதி நீரை ஒரு முறை லேசாக குடித்தார்.பின்னர் அதனை தூக்கி எறிந்து விட்டார்.

14 பக்க விளக்கம்: முன்னதாக இந்த விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் அளிக்கும்படி தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அதற்கு பதில் அளித்த அரவிந்த் கெஜ்ரிவால், அண்மை காலமாக ஹரியானாவில் இருந்து வரும் தண்ணீரை மிகவும் கலப்படம் நிறைந்ததாக, மனிதர்களின் ஆரோக்கியத்துக்கு விஷமானதாக இருக்கிறது என்று கூறியிருந்தார். இது போன்ற விஷ தண்ணீரை டெல்லி மக்களை குடிக்க அனுமதித்தால் மக்களி்ன் சுகாதாரத்துக்கு கேடு நேரிடும் என்று 14 பக்க விளக்கத்தை அளித்திருந்தார்.

ஆனால், அவர் அளித்த விளக்கம் ஏற்க கூடியதாக இல்லை எனக் கூறி, ஹரியானா அரசு மீது வைக்கும் குற்றச்சாட்டு குறித்து வரும் 31ஆம் தேதி 11 மணிக்குள் உரிய விளக்க அளிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. அப்படி விளக்கம் அளிக்கா விட்டால், கெஜ்ரிவால் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.