ETV Bharat / bharat

கூடியது நாடாளுமன்றம் - குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை...முழு விவரம்! - PRESIDENT SPEECH

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று கூடியது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றி வருகிறார். அதன் முழு விவரம் வருமாறு:

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை (ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 31, 2025, 11:25 AM IST

Updated : Jan 31, 2025, 1:02 PM IST

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் முழு உரை விவரம் வருமாறு:

  • நமது அரசியலமைப்பின் 75-ம் ஆண்டு தினம் சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில், அதனை உருவாக்கிய அம்பேத்கர் மற்றும் குழுவில் இருந்த அனைவருக்கும் இந்த அவை தலை வணங்குகிறது.
  • மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் திட்டங்களால் இளைஞர்கள் ஏராளமானோர் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
  • 2047-ல் வளர்ந்த பாரதம் என்ற இலக்கை அனைத்து உலக நாடுகளும் உன்னிப்பாக கவனிக்கின்றன
  • மத்திய அரசின் தொடர் நடவடிக்கைகளில் நாட்டில் சுமார் 25 கோடி ஏழைகள் வறுமையின் பிடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்
  • சிறு தொழில் உரிமையாளர்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் முத்ரா கடன்களுக்கான வரம்பு ரூ.20 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
  • கொரோனா பாதிப்புக்குப் பின் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
  • டிஜிட்டல் பண பரிவர்த்தனை நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் சென்றடைந்துள்ளது.
  • டிஜிட்டல் பண பரிவர்த்தனையின் பயன் அனைத்து மக்களையும் சென்றடைந்துள்ளது.
  • நாட்டில் பெண்களின் வாழ்த்தைத் தரம் பிரமிக்கத்தக்க வகையில் முன்னேற்றம் அடைந்துள்ளது
  • போர் மேகங்கள் சூழ்ந்துள்ளதால் உலகில் ஒரு வித இயல்புநிலைக்கு மாறான நிலை நிலவுகிறது.
  • அனைத்துத் தொழில் துறையினருக்கான கடன் வழங்கும் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன
  • உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க மத்திய அரசு தொடர்ந்து பாடுபாட்டு வருகிறது.
  • பழங்குடியின மக்களின் நலனை கருத்தில் கொண்டு 5 கோடி பேருக்காக பழங்குடியினர் கிராம மேம்பாட்டுத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
  • நாடு முழுவதும் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் 2.25 கோடி சொத்துரிமை அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
  • விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு உதவித்தொகையாக ரூ. 41,000 கோடி வழங்கப்பட்டுள்ளது.
  • வீடில்லாத ஏழை, எளிய மக்களுக்காக வீட்டு வசதி வழங்கும் திட்டத்தை மத்திய அரசு சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருகிறது.
  • பெண்கள் அனைவரும் தலைமையிடங்கு வர வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.
  • முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கான முதலீடு அதிகரிக்கப்பட்டு வருகிறது.
  • தொழில்துறையை பாதுகாக்க கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
  • ரயில் போக்குவரத்து மூலம் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இணைக்கப்பட்டுள்ளது.
  • வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியில் இந்த அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.
  • பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் சுமார் 30 மருத்துவக் கல்லூரிகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன.
  • வளர்ச்சின் பலன்கள் அந்தமான் நிகோபர் தீவுகளுக்கும் முழுமையாக கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • சட்டப் பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு, ஜம்மு காஷ்மீரும் வளர்ச்சிப் பாதையில் இணைந்துள்ளது.
  • மாற்றுத்திறனாளிகளுக்காக பல சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
  • ஜம்மு காஷ்மீரில் சட்டப் பேரவைத் தேர்தல் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
  • ஜம்மு காஷ்மீரில் தேர்தல் அமைதியாக நடந்த பெருமை அந்த மாநில மக்களையே சேரும்.
  • சைபர் குற்றங்களைத் தடுக்க இந்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
  • டிஜிட்டல் மோசடி, சைபர் குற்றங்கள், டீப்ஃபேக் தொழில்நுட்பம் ஆகியவை சமூகம், நிதி மற்றும் நாட்டின் பாதுகாப்பிற்கு பெரும் சவால்களாக உள்ளன.
  • சிறு, குறு தொழில்களை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
  • சிறு, குறு தொழில்களுக்கான வங்கிக் கடன் உத்தரவாதத் திட்டம் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.
  • புதிய கண்டுபிடிப்புகள் மூலம் நாட்டை உலகளவில் சிறந்து விளங்கச் செய்வதே மத்திய அரசின் நோக்கம்.
  • செயற்கை நுண்ணறிவுத் துறையில் இந்தியா தனது பணியை செயல்படுத்தத் தொடங்கியது.
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு கர்மயோகி திட்டம் மூலம் சிறப்பான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
  • மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், பாதுகாப்புத் துறைக்கான தளவாடங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு வருகின்றன.

Last Updated : Jan 31, 2025, 1:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.