ஐதராபாத்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 33 கடந்தது. மேலும் பலர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் நிலவுகிறது.
19.03.2024, பஞ்சாப்:பஞ்சாபின் சங்ரூர் மாவட்டத்தில் எத்தனால் கலந்த போலி மதுபானம் அருந்திய 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
14.05.2023, சென்னை: தமிழகத்தின் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்தனர். மதுபானத்தில் மெத்தனால் கலந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
14.04.2023, பாட்னா: பீகாரில் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தின் மோதிஹாரியில் சட்டவிரோத மதுபானம் அருந்திய சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.
அதேபோல் கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் அதே ஏப்ரல் 17ஆம் தேதி நடந்த போலி மதுபான குடித்துல் 26 பேர் இறந்தனர். மேலும் நான்கு பேர் மோதிஹாரி பகுதியில் கள்ள சாராயம் குடித்து உயிரிழந்தனர்.
25.07.2022, குஜராத்: பாவ்நகர் மற்றும் அகமதாபாத்தில் கள்ளச்சாராயம் குடித்த 42 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
22.02.2019 அசாம்:அசாம் மாநிலத்தின் கோலாகாட் மாவட்டத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் கள்ள சாராயம் குடித்த 80 பேர் உயிரிழந்தனர்.
09.02.2019:உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் கள்ள மது அருந்திய 104 பேர் உயிரிழந்தனர்.