பிஜாப்பூர் / சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூரில் மத்திய துணை ராணுவப் படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது நக்சலைட்டுகள் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தினர். குத்ரு சாலையில் நடந்த இந்த தாக்குதலில் 8 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது.
அதேவேளை, 8-க்கும் அதிகமான வீரர்கள் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தை பஸ்தார் காவல்துறை ஐஜி சுந்தர்ராஜ் உறுதி செய்துள்ளார்.
தகவலின்படி, இன்று திங்கள்கிழமை, பாதுகாப்புப் படையினரின் வாகனம் ஒன்று பிஜாப்பூர் குத்ரு சாலை வழியாக வீரர்களை அழைத்துச் சென்றுள்ளது. இதற்கிடையில், ஏற்கனவே பதுங்கியிருந்த நக்சலைட்டுகள் வாகனத்தை வெடிகுண்டு வைத்து தகர்த்ததாகக் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் 8 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்ததாக காவல்துறை தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒருவர் இந்த வெடிவிபத்தில் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் எட்டுக்கும் அதிகமான வீரர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.