மும்பை:18வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்றது. இதனையடுத்து மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன்.4) காலை முதலே எண்ணப்பட்டு வருகின்றன. மதியம் 1 மணி நிலவரப்படி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களிலும், 'இந்தியா' கூட்டணி 190க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.
மகாராஷ்டிரா தேர்தல்:மத்தியில் யார் ஆட்சி செய்யப் போகும் அரசியல் கட்சி யார் என்பதை நிர்ணயிக்கும் மாநிலங்களில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு முக்கிய பங்கு உள்ளது காரணம். இந்தியாவில் அதிக எம்பி தொகுதிகளை மாநிலங்களில் உத்தரப்பிரதேசத்திற்கு(80) அடுத்தபடியாக 48 தொகுதிகளை கொண்டுள்ளது மகாராஷ்டிரா.
இங்கு தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகிய இரண்டு கட்சிகளுக்குள் ஏற்பட்ட உட்கட்சி பூசல் காரணமாக இந்த இரண்டு கட்சிகளும், இரண்டாக உடைந்தன, இதனால் சின்னங்கள் மாறியது. இந்த கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில் 18வது நாடாளுமன்ற தேர்த்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
மொத்தம் உள்ள 48 தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் 61.33 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் பாஜக கூட்டணியில் பாஜக 28 இடங்களிலும், ஷிண்டே சிவசேனா 14 இடங்களிலும், அஜித் பவார் தலைமையிலான என்சிபி 5 இடங்களிலும் போட்டியிட்டன. காங்கிரஸ் கூட்டணியில் 21 இடங்களை உத்தவ் தாக்கரே சிவசேனாவுக்கு (UBT) காங்கிரஸ் கட்சிக்கு 17 மற்றும் தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் (SP) கட்சிக்கு 10 இடங்களும் போட்டியிட்டன.