தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Lok Sabha Election Phase 7 Live Update: 57 தொகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு! - Lok Sabha Election 2024 Phase 7

7ம் கட்ட மக்களவை தேர்தல் (Credits - ANI)
7ம் கட்ட மக்களவை தேர்தல்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 1, 2024, 7:19 AM IST

Updated : Jun 1, 2024, 9:36 AM IST

12:12 June 01

11.00 மணி நிலவரப்படி, 26.3% வாக்குப்பதிவு

11.00 மணி நிலவரம்

பீகார் - 24.25%

சத்தீஸ்கர் - 25.03%

இமாச்சல் பிரதேசம் - 31.92%

ஜார்கண்ட் - 29.55%

ஒடிசா - 22.64%

பஞ்சாப் - 23.91%

உத்தரப் பிரதேசம் - 28.02%

மேற்குவங்கம் - 28.10%

11:33 June 01

இமாச்சல் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு வாக்களிப்பு

இமாச்சல் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, ஹமிர்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

11:28 June 01

பாஜக வேட்பாளருக்கு எதிராக டிஎம்சி தொண்டர்கள் கோஷம்

மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள வாக்குச்சாவடியில் கொல்கத்தா வடக்கு மக்களவை தொகுதியின் பாஜக வேட்பாளர் தபாஸ் ராய்க்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் முழக்கங்களை எழுப்பியதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

11:21 June 01

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வாக்களிப்பு

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பக்தியார்பூர் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.

11:17 June 01

ஒடிசா சட்டப்பேரவை தேர்தல்: 7.69% வாக்குப்பதிவு

ஒடிசா மாநில சட்டப் பேரவைக்கு நான்காம் கட்டத் தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 7.69% வாக்குகள் பதிவாகியுள்ளன.

10:37 June 01

மக்கள் விரோத அரசுக்கு தக்க பதிலடி தரவேண்டும்

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் டிஎம்சி தேசிய பொதுச் செயலாளரும், டயமண்ட் ஹார்பர் தொகுதியின் வேட்பாளருமான அபிஷேக் பானர்ஜி கூறுகையில், '2019-ல் நாங்கள் பெற்றதை விட, தொகுதிப் பங்கீடு மற்றும் வாக்குகள் பங்கீடு ஆகிய இரண்டிலும் டிஎம்சியின் எண்ணிக்கை சிறப்பாக இருக்கும். மக்கள் விரோத அரசுக்கு தக்க பதிலடி தரவேண்டிய நேரம் இது. இதற்காக மக்கள் கட்டாயம் வாக்களியுங்கள்' என்று கூறினார்.

10:30 June 01

9.00 மணி நிலவரம் - அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 12.94%

9.00 மணி நிலவரம்

ஜார்க்கண்ட் - 12.15%

மேற்குவங்கம் - 9 சீட்ஸ் - 12.63%

உ.பி. - 12.94%

ஒடிசா - 6.69%

பஞ்சாப் - 9.64%

பீகார் - 10.58%

சத்தீஸ்கர் - 11.64%

09:59 June 01

வாரணாசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் வாக்களிப்பு

உ.பி காங்கிரஸ் தலைவரும் அக்கட்சியின் வாரணாசி தொகுதியின் வேட்பாளருமான அஜய் ராய் வாக்களித்தார். இதே தொகுதியில் பாஜக வேட்பாளராக நரேந்திர மோடியும், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் அதர் ஜமால் லாரி ஆகியோருடன் போட்டியிடுகின்றனர்.

09:39 June 01

பாஜக வேட்பாளர் கங்கனா ரனாவத் வாக்களிப்பு

இமாச்சல் பிரதேசம் மண்டி மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளர் கங்கனா ரனாவத், மண்டியில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.
பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'நான் வாக்களித்தேன். ஜனநாயகத் திருவிழாவில் எல்லோரும் வாக்குரிமையை பயன்படுத்துங்கள். இங்கு மோடி அலை உள்ளது. இமாச்சல் பிரதேசம் மக்கள் என்னை ஆசீர்வாதிப்பர். இமாச்சல் மாநிலத்தின் 4 தொகுதிகள் 400 இடங்களுக்குள் அடங்கும்' எனக் கூறினார்.

09:29 June 01

'இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பேன்' - பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

பஞ்சாப் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான பகவந்த் மான் தனது வாக்கை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பஞ்சாப் மக்கள் ஆர்வமுடன் வாக்களிக்க வேண்டும் எனவும், உங்களுக்காக வேலை செய்ய நானும் எனது மனைவியும் வாக்களித்தேன் எனவும், இன்று நடக்கும் இந்தியா கூட்டணி (INDIA Alliance) கூட்டத்தில் நான் பங்கேற்பேன்” எனவும் தெரிவித்துள்ளார்.

09:23 June 01

'சனாதனத்தின் கௌரவத்திற்கே எனது ஓட்டு' - பாஜக எம்பி ரவிசங்கர்

பீகார் மாநிலம் பாட்னா சாஹிப் தொகுதியின் பா.ஜ., எம்.பி.யும், வேட்பாளருமான ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், "நிலையான விக்சித் பாரத் அரசு, ஏழைகள் மற்றும் சனாதனத்தின் கௌரவத்துக்கு எனது ஓட்டு" என்று தெரிவித்துள்ளார்.

09:11 June 01

கால்வாயில் வீசப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம்?

மேற்குவங்கத்தில் வாக்குப்பதிவின் போது வன்முறை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், அப்போது வாக்குப்பதிவு இயந்திரம் கால்வாயில் தூக்கி வீசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்குவங்கம் மாநிலம், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டதில் தேர்தல் நடந்த 40, 41வது வாக்குச்சாவடிகளில் இவ்வாறு அத்துமீறல் ஏற்பட்டதாக தெரியவருகிறது.

08:27 June 01

சிக்கிம் ஆளுநர் லக்ஷ்மண் பிரசாத் ஆச்சார்யா வாக்களிப்பு

உத்தர பிரதேசம் மாநிலத்தில் சிக்கிம் ஆளுநர் லக்ஷ்மண் பிரசாத் ஆச்சார்யா வாரணாசியில் உள்ள ராம்நகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

08:17 June 01

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் வாக்களிப்பு

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி.யுமான ஹர்பஜன் சிங் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'ஜலந்தரில் அதிக வாக்குப்பதிவு நடக்க வேண்டும். அரசாங்கத்தை அமைக்க இது நாங்கள் செய்ய வேண்டிய கடமை. மக்களுக்கான அரசையே விரும்புகிறோம்' என்று கூறினார்.

08:14 June 01

ஜே.பி.நட்டா வாக்களிப்பு

இமாச்சல் பிரதேசத்தில், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா பிலாஸ்பூரில் உள்ள வாக்குச் சாவடியில் தனது மனைவி மல்லிகா நட்டாவுடன் வந்து வாக்களித்தார்.

08:11 June 01

உ.பி.யில் யோகி ஆதித்யநாத் வாக்களிப்பு

உத்தர பிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூரில் உள்ள கோரக்நாத்தில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.

07:32 June 01

ஆம் ஆத்மி கட்சி எம்பி ராகவ் சதா வாக்களிப்பு

பஞ்சாப் மாநிலம், ஆனந்த்பூர் சாஹிப் தொகுதிக்கு உட்பட்ட சாஹிப்சாதா அஜித் சிங் நகர் லக்னூரில் உள்ள வாக்குச்சாவடியில் ஆம் ஆத்மி கட்சி எம்பி ராகவ் சதா வாக்களித்தார்.

07:07 June 01

நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களிக்கும் மக்கள்!

7ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (ஜூன் 1) தொடங்கியது. 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 57 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேபோல, ஒடிசாவில் உள்ள 42 சட்டமன்ற தொகுதிகளில் ஒரே நேரத்தில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதனிடையே, உத்தர பிரேதேசத்தின் வாரணாசி தொகுதியில் பாஜக வேட்பாளராக நரேந்திர மோடியும், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக அதர் ஜமால் லாரியும், காங்கிரஸ் வேட்பாளராக அஜய் ராயும் களம் காணுகின்றனர்.

இந்தியாவின் ஜனநாயக திருவிழாவான நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரியின் 40 தொகுதிகள் உட்பட 22 மாநிலங்களில் மொத்தம் 102 தொகுதிகளில் நடைபெற்றது. இதேபோல, ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் கர்நாடகா, கேரளா, அசாம், பீகார், ஜம்மு & காஷ்மீர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு நடைபெற்றது.

அடுத்ததாக, 3ம் கட்ட மக்களவை தேர்தல் மே 7ஆம் தேதி 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தை சேர்ந்த 93 மக்களவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் அசாமில் 4 தொகுதிகள், பீகாரில் 5 தொகுதிகள், சத்தீஸ்கரில் 7 தொகுதிகள், டாமன்-டையூவில் 2 தொகுதிகள், கோவாவில் 2 தொகுதிகள், குஜராத்தில் 25 தொகுதிகள், கர்நாடகாவில் 14 தொகுதிகள், மத்திய பிரதேசத்தில் 9 தொகுதிகள், மகாராஷ்டிராவில் 11 தொகுதிகள், உத்தர பிரதேசத்தில் 10 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 4 தொகுதிகளும் அடங்கும்.

4ம் கட்ட மக்களவை தேர்தல் மே 13ஆம் தேதி ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 96 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. 5ம் கட்ட மக்களவை தேர்தல் மே 20ஆம் தேதி 8 மாநிலங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு நடந்தது. இதையடுத்து 6ம் கட்ட மக்களவை தேர்தல் மே 25ஆம் தேதி 8 மாநிலங்களில் உள்ள 58 தொகுதிகளில் நடைபெற்றது.

இறுதியாக, 7ம் கட்ட மக்களவை தேர்தல் இன்று பீகார், இமாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், சண்டிகர் ஆகிய 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.ஏறத்தாழ 10.06 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இவர்களில் 5.24 கோடி பேர் ஆண்கள் என்றும் 4.82 கோடி பேர் பெண்கள் மற்றும் 3 ஆயிரத்து 574 பேர் மூன்றாம் பாலினத்தவர் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Last Updated : Jun 1, 2024, 9:36 AM IST

ABOUT THE AUTHOR

...view details