சென்னை:காலையில் ஒரு டீ, வேலை நேரத்தில் நண்பர்களுடன் ஒரு டீ, மாலை வேளையில் ஒரு டீ என பலரது வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு உணவுப் பொருளாக மாறிவிட்டது இந்த தேநீர். புதியதாக ஒருவரைச் சந்திக்கும் போது கூட 'வாங்களே ஒரு டீ சாப்டுகிட்டே பேசலாம்' என்று ஒரு நட்பின் தொடக்கத்தில் கூட இந்த தேநீரின் ஆதிக்கம் தொடர்கிறது என்பது யாராலும் மறுக்க முடியாத ஒன்றாகும்.
இந்தியாவை பொறுத்தவரையில் ஏழைகளின் பானமாக மட்டும் இல்லாமல் செந்த ஊரைவிட்டு வெளியூரில் வேலை பார்க்கும் பல பேச்சுலர்களின் காலை உணவே இந்த தேநீர்தான் என்று சொல்லாலாம். இன்று (மே 21) சர்வதேச தேநீர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் பலரது வாழ்கையில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் தேநீர் குறித்த சில சுவாரஸ்யமான சில தகவல்களைத் தெரிந்து கொள்வோம்.
- தேநீரின் பிறப்பிடம் தென்கிழக்கு ஆசியா என்கின்றனர். ஆனால் இந்தியா, பர்மா, சீனாவில் தான் தேயிலையானது அடையாளம் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
- ஜப்பான், கொரியா, தாய்வான் ஆகிய நாடுகளில் ஒரு மரபு சடங்காகவும் கலையாகவும் தேநீர் சடங்கு (Tea Ceremony) கொண்டாடப்படுகிறது.
- உலக அளவில் அதிக தேயிலைகளை உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 2ம் இடத்தில் உள்ளது.
- தண்ணீருக்கு அடுத்தபடியாக உலகில் அதிகம் உட்கொள்ளும் பானம் தேநீர்தான் என்று சில ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன. அதே போல் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் தேநீர் அருந்தப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன.
தேநீர் நன்மையையா? தீமையா?தேநீரில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது நம்மை இளமையாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் சரியான செரிமானத்திற்கும் கார்டியோவாஸ்குலர் என்ற நோய் ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது.