தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இலவசமாக ஹலீம்.. இரவில் குவிந்த கட்டுக்கடங்காத கூட்டம்.. திணறிய ஹைதராபாத் போலீஸ்!

Hyderabad free haleem issue: ஹைதராபாத் நகரில் உள்ள மலக்பேட்(Malakpet) பகுதியில் தனியார் உணவகம் ஒன்று இலவசமாக ஹலீம் வழங்கப்படும் என அறிவித்ததை தொடர்ந்து இரவில் கூடிய கட்டுக்கடங்காத கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 14, 2024, 7:34 AM IST

ஹைதராபாத்:இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதம் கடந்த திங்கட்கிழமை மாலை பிறை பார்க்கப்பட்டுத் தொடங்கியுள்ளது. 30 நாட்கள் கொண்ட ரமலான் விரதம் இருக்கும் இஸ்லாமியர்கள் பகல் வேளை முழுவதும் உணவு சாப்பிடாமல் இருந்துவிட்டு மாலையில் நோன்பு கஞ்சி சாப்பிட்டு தங்களது தினசரி விரத்தை முடிப்பார்கள்.

இந்த ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி, ஹலீம் உள்ளிட்ட உணவுகள் மிகவும் பிரபலம், இதில் இரவு நேரங்களில் மட்டும் விற்பனை செய்யப்படும் ஹலீம் வகை உணவை சாப்பிட இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் ஆர்வம் காட்டுவது வழக்கம். இதனால் உணவகங்களில் இதற்காக பிரேத்யேக ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன.

இதையும் படிங்க: ரமலான் ஸ்பெஷல்.. வீட்டிலேயே மணமணக்கும் சுவையான நோன்பு கஞ்சி செய்வது எப்படி?

அந்த வகையில் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் உள்ள மலக்பேட் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல உணவகம் ஒன்று செவ்வாய்கிழமை இரவு 7 மணி முதல் 8 மணி வரை ஹலீம் வழங்கப்படும் என தங்களது கடையை விளம்பரப் படுத்த அறிவித்திருந்தது. இதனால் அந்த கடையின் முன்பு கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது.

ஒருகட்டத்தில் சாலையில் நீண்ட வரிசையில் காத்திருந்த மக்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படவே கடை உரிமையாளரை அழைத்த போலீசார் எச்சரிக்கை செய்துள்ளனர். மேலும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாததால் லேசான தடியடி நடத்தி கூட்டம் கலைக்கப்பட்டது.

போதைய முன்னேற்பாடுகள் செய்யாமல் இதுபோன்ற விளம்பர சலுகையாக அறிவிக்க வேண்டாம் என கடை உரிமையாளர்களுக்கு போலீசார் மற்றும் மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பாஜக 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! நிதின் கட்காரி, அனுராக் தாகூர் உள்ளிட்டோர் மீண்டும் போட்டி!

ABOUT THE AUTHOR

...view details