ஸ்ரீநகர்:ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்குள்ள 90 தொகுதிகளுக்கு 10 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு, செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
காஷ்மீரில் காங்கிரஸ் தேசிய மாநாடு கட்சி , தேசிய சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை தனித்துப் போட்டியிடுகின்றன. இதனால், அங்கு மும்முனைப் போட்டி நிலவவியது. தற்போது, வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தேர்தல் முடிவுகளில் நேரடித் தாக்கம் இருப்பதால் 5 நியமன உறுப்பினர்கள் மீது கவனம் திரும்பியுள்ளது.
ஜம்மு மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் மறுசீரமைப்புச் சட்டம் பிரிவு 15ன் படி, சட்டப் பேரவையில் பெண்களுக்கு போதுமான பிரதிநிதித்துவம் இல்லையென்றால், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் பரிந்துரையின் பேரில் 2 பெண் உறுப்பினர்களை ஆளுநர் நியமிக்க வேண்டும். மீதமுள்ளவர்களில் காஷ்மீரில் குடியேறியவர்கள் மற்றும் பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்மு மற்றும் காஷ்மீர் (PoJK) அகதிகள் அடங்குவர்.
வேட்புமனுத்தாக்கல் செயல்முறை புதுச்சேரியை போன்றது. இங்கு லெப்டினன்ட் கவர்னர் (lieutenant governor) 3 எம்எல்ஏக்களை சட்டசபைக்கு பரிந்துரை செய்ய முடியும். காங்கிரஸ் தலைமையிலான அரசைக் கலந்து ஆலோசிக்காமல் புதுச்சேரியின் அப்போதைய லெப்டினன்ட் கவர்னர், கிரண் பேடியின் உறுப்பினர் சேர்க்கை நடவடிக்கையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2017-2018ல் வழக்குத் தொடரப்பட்டது. எம்எல்ஏக்களை நியமனம் செய்வதற்கு முன், மத்திய, மாநில அரசை கலந்தாலோசிக்கவில்லை என்பதை உறுதி செய்த உச்ச நீதிமன்றம் இதில் எந்த சட்ட விரோதமும் இல்லை என்று தெரிவித்துள்ளது.
வாக்குரிமை:சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் ஜம்முவில் 43 மற்றும் காஷ்மீரில் 47 என 90 தொகுதிகளுக்கு 64 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆனால், நம்பிக்கையில்லா தீர்மானம் உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு இணையாக வாக்களிக்கும் உரிமையை, 5 நியமன உறுப்பினர்கள் பெற்றுள்ளனர்.
இது குறித்து, முன்னாள் ஜம்மு மற்றும் காஷ்மீர் சட்ட செயலாளர் முகமது அஷ்ரப் மிர் ( Mohammad Ashraf Mir ) கூறுகையில், “அரசாங்கம் அமைப்பதற்கு முன் லெப்டினன்ட் கவர்னர் 5 உறுப்பினர்களை பரிந்துரை செய்யலாம். ஜம்மு மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்பில், மத்திய அரசை பிரதிநிதித்துவப்படுத்தும் லெப்டினன்ட் கவர்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் ஆலோசனையின்றி அவர்களை நியமிக்க அனுமதிக்கப்படுகிறார்.