தமிழ்நாடு

tamil nadu

கட்சித் தாவினால் பென்ஷன் கட்.. எம்.எல்.ஏக்களுக்கு செக் வைத்து மசோதா.. ஹிமாச்சல் அரசு அதிரடி - Himachal Pradesh MLA Pension Bill

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 5, 2024, 12:27 PM IST

Himachal Pradesh MLA Pension Bill: கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்படும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் ரத்து செய்யும் மசோதா ஹிமாச்சலப்பிரதேச சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மழைக்கால கூட்டத்தொடரின் போது இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு
மழைக்கால கூட்டத்தொடரின் போது இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு (Credits- IANS Website)

சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான அரசு நடந்து வருகிறது. இமாச்சலின் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவால் நேற்று சட்டசபையில் அதிரடியான மசோதாவை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மசோதாவானது அரசியலமைப்புச் சட்டத்தின் 10வது அட்டவணையின் கீழ் எந்த நேரத்திலும் ஒரு எம்.எல்.ஏ தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தால், சட்டத்தின் கீழ் அவர் ஓய்வூதியம் பெற தகுதியற்றவராவர். அதாவது ஒரு எம்.எல்.ஏ அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற கட்சியை விட்டு விலகி மற்ற கட்சிகளுக்குத் தாவினால் அவர் சபாநாயகரால் தகுதி நீக்கம் அடைவார். அல்லது ஏதேனும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு தகுதி நீக்கம் செய்யப்படலாம். அவ்வாறு தகுதி நீக்கம் செய்யப்பட்டவர் ஓய்வூதியம் பெற தகுதியற்றவர்கள் ஆகும் வகையில் இந்த மசோதா திருத்தம் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதாவிற்கு எதிப்பு தெரிவித்த எதிர்க்கட்சியான பாஜக எம்.எல்.ஏக்கள் இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எனவும் காங்கிரஸ் கட்சி தனது கட்சியில் இருந்து விலகிய எம்.எல்.ஏக்களை பழிவாங்க நினைக்கிறது எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதில், முன்னாள் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் சுதிர் சர்மா, இந்தர் தத் லகன்பால், ராஜிந்தர் ராணா, தேவிந்தர் குமார் பூட்டோ, சேதன்யா சர்மா மற்றும் ரவி தாக்கூர் ஆகியோர் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் ஹர்ஷ் மகாஜனுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதுமட்டுமின்றி இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 6 பேரும் பாஜக சார்பில் போட்டியிட்டனர். சுதிர் சர்மா மற்றும் லகன்பால் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், மற்ற நான்கு பேரும் தோல்வியடைந்தனர்.

இந்தியாவிலேயே முதல் முறையாக ஹிமாச்சல் பிரதேச மாநிலம் நிறைவேற்றியுள்ளது. குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்குப் அனுப்பப்பட்டதை அடுத்து சட்டமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மசோதா மீதான விவாதத்திற்கு பதிலளித்த முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு கூறுகையில், "ஆறு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ் கட்சிக்கு துரோகம் இழைத்துவிட்டனர். இந்த மசோதா ஜனநாயகத்தை வலுப்படுத்தும். எம்.எல்.ஏ.க்களை கட்சியை விட்டு விலகாமல் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது" என்றார்.

இந்த மசோதா அவசர அவசரமாக கொண்டு வரப்பட்டதாகவும், இது அரசியல் பழிவாங்கல் நோக்கில் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் கட்சி கோட்பாடை மீறியதற்காக சபாநாயகர் தான் அவர்களை தகுதி நீக்கம் செய்ததார் எனவே அவர்கள் மீது 10வது அட்டவணையின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஜெய்ராம் தாக்கூர்(பாஜக) கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:சோனியா காந்தி, ராகுல் காந்தி குறித்து அப்படியொரு போஸ்ட்.. வங்கதேச பத்திரிகையாளர் மீது வழக்கு!

ABOUT THE AUTHOR

...view details