டெல்லி:முதுநிலை தேர்வுக்கான தேதியை அடுத்த இரண்டு நாட்களில் தேசிய தேர்வு வாரியம் வெளியிடும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு வினாத் தாள் கசிவு குளறுபடி காரணமாக கடந்த வாரம் நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், அரியானாவில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ரத்து செய்யப்பட்ட நீட் முதுநிலை தேர்வின் புதிய தேதியை தேசிய தேவு வாரியம் இரண்டு நாட்களில் வெளியிடும் என்றார். யுஜிசி நெட், சிஎஸ்ஐஆர் உள்ளிட்ட ரத்து மற்றும் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளின் தேதியை தேசிய தேர்வு முகமை வெளியிட்ட நிலையில், முதுநிலை நீட் தேர்வுக்கான தேதி குறித்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய பல்கலைக்கழகங்களில் அறிவியல் உதவிப் பேராசியர் பணிக்கான ஒருங்கிணைந்த சிஐஎஸ்ஆர் யுஜிசி நெட் தேர்வு ஜூலை 25 முதல் ஜூலை 27 வரை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தேசிய பொது நுழைவுத் தேர்வான் என்சிஇடி ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 18ஆம் தேதி நடைபெற்ற யுஜிசி நெட் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் அதன் மறுதேர்வு ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 4ஆம் தேதிக்குள் நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் டார்க்நெட் மற்றும் டெலிகிராம் சேனல் மூலம் நீட் தேர்வு வினாத் தாள் கசியவிடப்பட்டதாகவும், அது குறித்து சிபிஐ தொடர்ந்து விசாரித்து வருவதாகவும் கூறினார்.
இதையும் படிங்க:UGC-NET June 2024, CSIR UGC NET, NCET தேர்வு தேதி அறிவிப்பு- தேசிய தேர்வு முகமை! - UGC NET 2024 Retest Date