தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஓடும் பள்ளி வேனில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஓட்டுநர்.. புனேவில் பகீர் சம்பவம்! - School van driver harass - SCHOOL VAN DRIVER HARASS

மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளி வேனில் இரு சிறுமிகள் ஓட்டுநரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை (கோப்புப் படம்)
பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை (கோப்புப் படம்) (Credits - ETV Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 3, 2024, 1:18 PM IST

புனே:மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரில் 6 வயதுடைய இரு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி வேன் ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி, புனேவின் வான்வாடி பகுதியில் உள்ள பள்ளிக்குச் சென்றுவிட்டு மாலையில் இரு மாணவிகளும் வீட்டிற்குச் செல்வதற்காக வேனில் ஏறிச் சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து வான்வாடி காவல் நிலைய அதிகாரி கூறுகையில், "பள்ளியிலிருந்து வீடு திரும்பியபோது இரு சிறுமிகளின் அந்தரங்கப் பகுதிகளை குற்றம் சாட்டப்பட்ட நபர் தொட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வீடு திரும்பியதும் பாதிக்கப்பட்ட இரு சிறுமிகளில் ஒருவர், தனக்கு நடந்த சம்பவம் குறித்து தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். அதன் பின்னர், இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடமும், காவல் துறையிடமும் புகார் தெரிவிக்கப்பட்டது." என்றார்.

இதையும் படிங்க:உ.பி. பட்டாசு ஆலை வெடி விபத்து; பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

இதைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட வேன் ஓட்டுநர் சஞ்சய் ரெட்டி மீது பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) சட்டம் பிரிவு 64-ன் கீழ் (பாலியல் வன்கொடுமைக்கான தண்டனை), பிரிவு 65 (2) -(12 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கான தண்டனை) மற்றும் குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் (போக்சோ) சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள பத்லாபூரில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த ஆகஸ்ட் மாதம், தூய்மைப் பணியாளர் ஒருவர், தலா 4 வயதுடைய இரு பெண் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக விவகாரத்தைத் தொடர்ந்து அங்கு பெரும் போராட்டத்துக்கு வழிவகுத்தது.

பின்னர் குற்றம் சாட்டப்பட்ட அக்ஷய் ஷிண்டே கைது செய்யப்பட்டார். கடந்த 23ஆம் தேதி அன்று காவல்துறையினருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் அவர் கொல்லப்பட்டார். எனினும் ,அம்மாநிலத்தில் அடுத்தடுத்து குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழ்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details