டெல்லி : அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து மும்பை சத்திரபதி சிவாஜி விமான நிலையத்திற்கு கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி ஏர் இந்தியா விமானத்தில், 80 வயது மதிக்கத்தக்க முதியவர் பயணித்து உள்ளார். விமான நிலையத்தில் விமான ஊழியர்களிடம் சக்கர நாற்காலி கோரி இருந்த நிலையில், பற்றாக்குறை காரணமாக முதியவருக்கு வீல் சேர் வழங்கப்படவில்லை.
இதையடுத்து விமான நிலையத்தின் இமிகிரேஷன் முனையத்திற்கு ஏறத்தாழ 1 புள்ளி 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு முதியவர் நடந்து சென்ற முதியவர் திடீரென நிலைதடுமாறி சரிந்து விழுந்து உள்ளார். முதியவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஏறத்தாழ நான்கு நாட்கள் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
இருப்பினும், கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி சிகிச்சை பலனனின்றி முதியவர் உயிரிழந்தார். முதியவருக்கு லேசான மாரடைப்பு மற்றும் பல்வேறு இணை நோய்கள் இருந்ததன் காரணமாக உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் விதிமுறைகளை கடைபிடிக்கத் தவறியதாக, விமானப் போக்குவரத்து இயக்குநரகமான டிஜிசிஏ, ஏர் இந்தியா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது.