வாஷிங்டன்: 2025ஆம் ஆண்டு சர்வதேச அளவில் சீரான பொருளாதார வளர்ச்சி இருந்தபோதிலும் இந்திய பொருளாதாரம் சிறிதே பலவீனமாக இருக்கும் என்று ஐஎம்எஃப் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா கூறியுள்ளார். அமெரிக்காவின் வர்த்தக கொள்கையை சுற்றி இந்த ஆண்டு பெரும் அளவுக்கு நிச்சயமற்ற தன்மை நிலவலாம் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வாஷிங்டன்னில் வெள்ளிக்கிழமை அன்று ஆண்டு செய்தியாளர் சந்திப்பில் பேசிய கிறிஸ்டலினா ஜார்ஜீவா,"2025ஆம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் சிறிதளவு பலவீனமாக இருக்கும். அதே நேரத்தில் முன்பு எதிர்பார்த்ததை விடவும் அமெரிக்காவில் நல்ல சூழல் நிலவும். ஐரோப்பிய யூனியனில் தடுமாற்றம் இருக்கும். பிரேசில் அதிக பணவீக்கத்தை எதிர்கொள்ளும்
உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனாவில் உள்நாட்டு தேவையில் பணவாட்ட அழுத்தம் மற்றும் தொடர்ச்சியான சவால்கள் இருப்பதை ஐஎம்எஃப் கண்டது. குறைந்த வருவாய் நாடுகள் அனைத்து முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், எந்தவொரு புதிய அதிர்ச்சியும் அவைகளை மிகவும் எதிர்மறையாக பாதிக்கக்கூடிய நிலையில் இருக்கின்றன.
2025ஆம் ஆண்டைப் பொறுத்துவரை நாம் என்ன எதிர்பார்க்கின்றோம் என்றால், குறிப்பாக பொருளாதார கொள்கை விதிகளை பொறுத்தவரை பெரும் அளவுக்கு நிச்சயமற்ற தன்மை இருக்கும். அமெரிக்க பொருளாதாரத்தின் பங்கு மற்றும் அளவை கொடுக்கும்போது, குறிப்பாக கட்டணங்கள், வரிகள்,கட்டுப்பாடுகள் தளர்த்துதல் மற்றும் அரசாங்க செயல்திறன் என்பது வரவிருக்கும் புதிய நிர்வாகம் கொள்கை முன்னெடுப்புகளில் சர்வதேச அளவில் ஆர்வம் இருக்கும் என்பதில் ஆச்சர்யம் இல்லை.
இதையும் படிங்க: அடுத்த மாதம் பிரான்ஸ் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி! மேக்ரான் வெளியிட்ட தகவல்!
குறிப்பாக வர்த்தக கொள்கைக்கான வழியை சுற்றி இருக்கும் இந்த நிச்சயமற்ற தன்மை என்பது முன்னோக்கி செல்லும். சர்வதேச பொருளாதார வளர்ச்சியை குறைக்கும் அம்சங்களை எதிர்கொள்ளும். குறிப்பாக சர்வதேச விநியோக சங்கிலியில் , நடுத்தர அளவிலான பொருளாதாரங்கள், ஆசிய எனும் பிராந்தியத்தில் உள்ள நாடுகள், பிராந்தியங்கள் ஆகியவை மேலும் ஒருங்கிணைத்திருக்கும்
குறுகிய கால கடன் விகிதங்கள் குறைந்தபோதிலும் உயர்ந்தபட்ச நீண்டகால வட்டி விகிதங்கள் வாயிலாக பொதுவாக சர்வதேச அளவில் இந்த நிச்சயமற்ற தன்மை வெளிப்படும். அமெரிக்காவின் 47 ஆவது அதிபராகப் பொறுப்பேற்க உள்ள டிரம்ப், சீனா, கனடா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் மீது கூடுதல் கட்டணங்களை அமல்படுத்துவார். கட்டணங்களை உபயோகிப்பது ஒரு முக்கியமான கொள்கை கருவியாக அவர் பொதுவெளியில் அறிவிக்கிறார். பணவீக்கத்தைப் பொறுத்தவரை, உலகளாவிய பணவீக்கக் குறைப்பு தொடரும் என்று ஐஎம்எஃப் எதிர்பார்க்கிறது.
உலக பொருளாதாரத்தை சரிவை நோக்கி தள்ளாமல் இருக்க பணவீக்கத்துக்கு எதிராக போராட வேண்டும் எனில் உயர்ந்தபட்ச வட்டிவிகிதத்தை நாம் எல்லோரும் அங்கீகரிக்க வேண்டும். அவை விரும்பிய பலன்களை வழங்கியுள்ளன. வளர்ந்து வரும் சந்தைகளை விட முன்னேறிய பொருளாதாரங்களில் பொருளாதரத்தின் மொத்த பணவீக்கம் விரைவில் இலக்கை நோக்கி திரும்பும்,"என்றார்.