பஞ்சாப் (லூதியானா): பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தின் லூதியானா மேற்கு தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ குர்பிரீத் கோகி. இவர் நேற்று (ஜன.10) வெள்ளிக்கிழமை இரவு மர்மான முறையில் தனது வீட்டில் துப்பாக்கி குண்டு பாய்ந்து படுகாயமடைந்து கிடந்தார். இதையடுத்து, நள்ளிரவு 12 மணிக்கு குர்பிரீத் கோகி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து பேசிய காவல்துறையினர், “ எம்எல்ஏ குர்பிரீத் கோகி நேற்று இரவு தவறுதலாக தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். மேலும் இது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது” என்றனர்.
#WATCH | Ludhiana, Punjab: AAP MLA Gurpreet Gogi found dead with bullet injuries.
— ANI (@ANI) January 10, 2025
The incident happened around 12 am and he was dead when he was brought to DMC hospital. Investigation underway: DCP Jaskaran Singh Teja
(Visuals from outside DMC hospital) pic.twitter.com/oRxVqw17ti
இதையடுத்து பேசிய லூதியானா துணை ஆணையர் ஜஸ்கரன் சிங் தேஜா, "குர்பிரீத் கோகி மருத்துவமனையில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அவரது உடல் டி.எம்.சி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் குர்பிரீத் கோகியின் தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை முடிவுகளை வைத்து விரைவில் விரிவான தகவல் அளிக்கப்படும்” என்றார்.
#WATCH | Ludhiana, Punjab: DCP Jaskaran Singh Teja says, " gurpreet gogi was declared brought dead at the hospital, his body has been kept at the mortuary in dmc hospital. post-mortem will be conducted. as per the family members, he shot himself accidentally, he sustained bullet… https://t.co/sZEFYD9bdc pic.twitter.com/xqGPCMnlj1
— ANI (@ANI) January 11, 2025
இதையும் படிங்க: புதிய சார்ஸ் கோவிட்-2 வகை தொற்று இந்தியாவில் அதிகரிப்பு...உலகசுகாதார நிறுவனம் தகவல்
குர்பிரீத் கோகி லூதியானா தொகுதியில் இரண்டு முறை காங்கிரஸ் எம்.எல்.ஏவாக பதவி வகித்த நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்டு, காங்கரஸ் மாநில தலைவர் பாரத் பூஷண் ஆஷுவை தோற்கடித்து எம்எல்ஏவாக வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.