தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜம்மு காஷ்மீர் துப்பாக்கிச் சூடு: சிஆர்பிஎப் வீரர் வீரமரணம்! பாக். பயங்கரவாதி என்கவுன்டர் எனத் தகவல்! - Jammu Kashmir Encounter - JAMMU KASHMIR ENCOUNTER

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சிஆர்பிஎப் வீரர் சுட்டுக் கொல்லப்பட்டார். பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் சந்தேகத்திற்குரிய பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாக ஜம்மு கூடுதல் டிஜிபி தகவல் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Encounter Breaks out in Doda (ETV Bharat Portal)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 12, 2024, 12:26 PM IST

கதுவா: இதுகுறித்து ஜம்மு மண்டல காவல் துறை கூடுதல் டிஜிபி ஆனந்த் ஜெயின் கூறுகையில், இந்திய எல்லைக்குள் அத்துமீறி ஊடுருவிய இருவர் ஜம்மு காஷ்மீர், கதுவா மாவட்டத்தின் சர்வதேச எல்லை அருகே உள்ள சைதா சுகல் கிராமத்திற்குள் நுழைந்து அங்குள்ள குடியிருப்புவாசிகளிடம் தண்ணீர் கேட்டுள்ளனர்.

இருவரது நடவடிக்கைகள் குறித்து சந்தேகித்த கிராம மக்கள் அவர்கள் பற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மறைந்து பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர்.

அந்த தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். உயிரிழந்த நபர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பயங்கரவாதி என சந்தேகிக்கப்படுகிறது. மேலும் பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் உள்ளூரை சேர்ந்த ஒருவர் படுகாயம் அடைந்தார்.

அதே கிராமத்தை சேர்ந்த ஓமர் நாத் என்பவர் துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்த நிலையில் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றொரு பயங்கரவாதி தப்பி தலைமறைவானதாக கூறப்படும் நிலையில், அவரை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக கூடுதல் டிஜிபி ஆனந்த் ஜெயின் தெரிவித்தார்.

இதனிடையே துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர் கே.தாஸ் என்றும் 121வது படைப் பிரிவை சேர்ந்தவர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக கடந்த சில நாட்களுக்கு ரீஸ்ஸி பகுதியில் புனித யாத்திரை சென்று கொண்டு இருந்த யாத்ரீகர்கலின் பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். கடந்த சில நாட்களாக இந்திய எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:ஒடிசா முதலமைச்சராக மோகன் சரண் மாஜி தேர்வு! ஜூன் 12ல் பதவியேற்கிறார்! - Odisha New Cm Mohan Charan Majhi

ABOUT THE AUTHOR

...view details