பாட்னா: பீகார் மாநிலம் சுபால் அருகே உள்ள மரிச்சா பகுதியில் பீஜா - பகெளர் இடையே மேம்பால கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதி இன்று காலை திடீரென இடிந்து விழுந்ததில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர் ஒருவர் உயிரிழந்தார்.
பீகாரில் மேலும் ஓர் மேம்பாலம் இடிந்து விபத்து.. ஒருவர் பலி; பலர் கவலைக்கிடம்! - Supaul bridge collapse - SUPAUL BRIDGE COLLAPSE
bihar bridge collapse: பீகார் மாநிலம் சுபால் பகுதியில் மேம்பால கட்டுமான பணியின் போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
Etv Bharat
Published : Mar 22, 2024, 10:07 AM IST
மேலும் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த பலர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
பீகாரில் ரூ.1710 கோடி மதிப்பீட்டில் பாகால்பூர் பகுதியில் அகுவானி - சுல்தாங்கஞ்ச் இடையே கட்டப்பட்டு வரும் மேம்பாலம் கடந்தாண்டு ஜூன் மாதம் இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.