ஜான்சி:உத்திரப் பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில், 12ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மாணவியின் தற்கொலைக்கு அவர் குறித்த தவறுதலான புரிதல் அடங்கிய வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியதே காரணம் எனக் கூறப்படுகிறது.
வட இந்தியர்களால் கொண்டாடப்படும் ஹோலி பண்டிகை, கடந்த திங்கட்கிழமை (மார்ச் 25) வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அந்த நாளில், மாணவியின் வீட்டிற்கு உள்ளூர் இளைஞர் ஒருவர் வந்துள்ளார். அந்த இளைஞர் வீட்டிற்கு வந்துவிட்டு சென்றதை, மாணவியின் எதிர் வீட்டில் இருந்த நான்கு பெண்கள் வீடியோ எடுத்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், அந்த வீடியோவை அவர்கள் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதை அடுத்து, மாணவிக்கு எதிராக பதிவிடப்பட்ட அவதூறு கருத்துக்களால், மன உளைச்சலின் காரணமாக மாணவி தற்கொலை செய்து கொண்டதாக, மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஜான்சி மாவட்டத்தின் மௌரானிபூரில் உள்ள பதர்வாராவில் வசித்து வரும் மாணவியின் தந்தை அளித்துள்ள புகாரில், "18 வயதான எனது மகள், மௌரானிபூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். தற்போது தான் 12ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதினார். ஹோலி பண்டியன்று, அனைவரும் வீட்டில் ஒன்றாக தான் இருந்தோம். மதிய வேளையில் இளைஞர் ஒருவர் வீட்டிற்கு வந்திருந்தார்.