புனே :மகாராஷ்டிரா மாநிலம் லத்தூர் பகுதியைச் சேர்ந்த 22 வயது பெண், புனேவில் உள்ள வக்ஹோலி பகுதியில் தங்கி பிரபல பொறியியல் கல்லூரியில் படித்து வந்து உள்ளார். இந்நிலையில், கடந்த மார்ச் 30ஆம் தேதி அந்த பெண் விமான நிலையம் பகுதியில் உள்ள பீனிக்ஸ் மால் இரவு 9 மணி வாக்கில் மர்ம நபர்களால் கடத்தப்பட்டு உள்ளார்.
மகள் குறித்த தகவல் கிடைக்காத நிலையில், புனே வந்த பெற்றோர் விமான நிலைய பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர். இந்நிலையில், மாணவி கடத்தப்பட்டது குறித்தும், 9 லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டியும் தந்தையின் செல்போன் எண்ணுக்கு மர்ம நபர்கள் குறுஞ்செய்தி அனுப்பி உள்ளனர்.
இதையடுத்து, மகளை காப்பாற்ற 9 லட்ச ரூபாய் பணத்தை தந்தை வழங்கி உள்ளார். இருப்பினும், அந்த மர்ம நபர்கள் மாணவியை கொலை செய்தனர். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் மாணவியின் நண்பர்கள் மூன்று பேரை கைது செய்தனர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை போலீசார் வெளியிட்டு உள்ளனர்.
அதன்படி பணத்துக்காக மாணவி சக நண்பர்களால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது வெளிச்சத்திற்கு வந்து உள்ளது. இந்த விவகாரத்தில் ஷிவம் புலவலே, சாகர் ஜாதவ், சுரேஷ் இந்தூர் ஆகிய மூன்று பேரை மகாராஷ்டிர போலீசார் கைது செய்து உள்ளனர். இது குறித்து பேசிய போலீசார், கடந்த மார்ச் 30ஆம் தேதி வாடகை கார் அமர்த்திய மூன்று பேரும் மாணவியை கடத்திச் சென்று பெற்றோரிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர்.
பெற்றோரும் 9 லட்ச ரூபாய் பணம் கொடுத்த நிலையில், எங்கே மாணவியை வெளியே விட்டால் தங்களது அடையாளங்கள் குறித்து பெற்றோர் மற்றும் போலீசாரிடம் தெரிவித்து விடுவாரோ அதனால் மாட்டிக் கொள்வோமோ என்று அஞ்சிய மூன்று பேரும், மாணவியை கொலை செய்து புதைத்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
மூன்று பேரையும் கைது அடுத்த கட்ட விசாரணையில் ஈடுபட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். பணத்துக்காக தோழியை கடத்தி பணத்தை பெற்றுக் கொண்ட பின் போலீசில் சிக்கிக் கொள்வோமோ என்ற அச்சத்தில் மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க :யூடியூபில் சப்ஸ்கிரைபர்ஸ் அதிகரிக்க நூதன திட்டம் - வினாத் தாள்களை கசிய விட்ட ஆசிரியர் கைது! - Odisha Question Paper Leak