தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு - DEARNESS ALLOWANCE

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி (image credits-Etv Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 16, 2024, 6:05 PM IST

புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக ஒரு தவணை அகவிலைப்படி உயர்வும், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணமும் வழங்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களின் தற்போதைய அடிப்படைச் சம்பளம், ஒய்வூதியத்தின் 50%-ஐவிட மூன்று சதவீத (3%) அகவிலைப்படி உயர்வு அளிக்கும் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதன்படி 01.07.2024 தேதி முதல் இந்த அகவிலைப்படி உயர்வு நடைமுறைக்கு வரும். விலைவாசி உயர்வை ஈடுகட்டும் விதமாக, ஏற்கனவே ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறைகளுக்கு ஏற்ப, 7-வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரை அடிப்படையில் வழங்கப்படுகிறது. இந்த உயர்வு மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.9,448.35 கோடி செலவு ஏற்படும். இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் 49.18 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 64.89 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் அடைவர்.

ABOUT THE AUTHOR

...view details