ஐதராபாத் :தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த கோர விபத்தில் ஆலையின் மேலாளர் உள்பட 5 பேர் வரை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், 10 தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
வெடி விபத்து நடந்த இடத்தில் 8 முதல் 10 பேர் சிக்கிக் இருப்பதாக கூறப்படும் நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. அதேநேரம் விபத்து நடந்த நேரத்தில் ஆலையில் ஏறத்தாழ 50 பேர் வரை பணியில் இருந்ததாக கிராம மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.