இம்பால்: மணிப்பூரில் குக்கி மற்றும் மெய்தி இரு குழுக்களிடைய கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நடந்த வன்முறை சம்பவம் நாட்டையே உலுக்கியது. வன்முறையாளர்கள் மற்றொரு தரப்பை சார்ந்த இரு பெண்களை நிர்வாணமாக சிறைபிடித்து ஊர்வலமாக அழைத்து சென்றதாக வெளியான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி காண்போரை பதைபதைக்க வைத்தது.
இதனால், மணிப்பூரில் உள்ள பதட்டமான பகுதிகளை பாதுகாப்பு படையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு குக்கி இனத்தை சேர்ந்தவர்கள் ஜிரிபாம் மாவட்டத்தில் உள்ள சில கிராமங்கள் மீது ராக்கெட் வெடிகுண்டுகளை ஏவி தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். மேலும், பயங்கரவாதிகள் அதிநவீன ஆயுதங்களை தாக்குதலுக்கு பயன்படுத்தி வருவதை அறிந்த காவல்துறை, கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இந்த சூழலில், மணிப்பூரில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் செப்.,15 வரை இணைய சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது; பொது அவசரநிலை மற்றும் பொது பாதுகாப்பு விதிகள் 2017இன், 2 ஆவது விதியின் கீழ் இந்த அறிவிப்பானது வெளியிடப்படுகிறது.