தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியில் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவியேற்றார் திருமுருகன்! - puducherry Minister thirumurugan

Puducherry Minister Thirumurugan: புதுச்சேரி அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட திருமுருகனுக்கு, துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.

puducherry Minister thirumurugan
puducherry Minister thirumurugan

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 14, 2024, 5:22 PM IST

புதுச்சேரி:புதுச்சேரி மாநிலம் காரைக்கால் நெடுங்காடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சந்திர பிரியங்கா. முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார். ஆனால் அவரது செயல்பாடு சரியில்லை எனக் கூறி கடந்த கடந்தாண்டு அக்.10தேதி அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இதனையடுத்து 5 மாதங்களாய் அமைச்சர் பதவி காலியாக இருந்தது. இதனையடுத்து முதலமைச்சர் ரங்கசாமி பரிந்துரையின் பேரில், காரைக்கால் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ள திருமுருகனை அமைச்சராக நியமிக்கக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார். ஆனால் இரண்டு முறை அவரது பதவி தேதி அறிவிக்கப்பட்டு, பதவி ஏற்பு தள்ளி வைக்கப்பட்ட நிலையில், இன்று பதவி ஏற்பு விழா நடைபெற்றது.

ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை, என்.ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர். திருமுருகனுக்கு பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம்,அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில் தற்போது என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் 3 அமைச்சர்கள், பாஜக சார்பில் 2 அமைச்சர்கள் உள்ளனர்.

யார் இந்த திருமுருகன்?:புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில் புதிய அமைச்சராகப் பதவி ஏற்றுள்ள பி. ஆர். என். திருமுருகன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நள.மகாராஜனுடைய மகன் ஆவார்.

1972 ஆம் ஆண்டு பிறந்த இவர் பி.ஏ சமூகவியல் படித்துள்ளார். திருமணமான இவருக்கு மனைவி ஒரு மகள் ஒரு மகன் ஆகியோர் உள்ளனர் .காங்கிரஸ் கட்சியில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய இவர் காரைக்கால் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும், பி.சி.சி உறுப்பினராகவும், காரைக்கால் மாவட்டச் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்த இவர்.

அங்கிருந்து விலகு என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணைந்து 2011,2016 மற்றும் 2021 ஆகிய சட்டமன்ற தேர்தல்களில் காரைக்கால் வடக்கு தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்பொழுது சட்டமன்ற உறுப்பினராக உள்ள இவர் காரைக்கால் மாவட்ட என். ஆர். காங்கிரஸ் தலைவராகவும் இருந்து வருகிறார்.

இதையும் படிங்க:அரசு கல்லூரிகளில் 4,000 உதவி பேராசிரியர் பணி: ஏப்.29 வரை விண்ணப்பிக்கலாம் என டிஆர்பி அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details