புலிவெந்துலா:ஆந்திராவில் ஆர்டிசி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பயணிகள் 25 பேர் காயமடைந்துள்ளனர். ஐந்து பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திர மாநிலம், ஒய்எஸ்ஆர் மாவட்டம், புலிவெந்துலா அருகே ஆர்டிசி பேருந்து கதிரில் இருந்து பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. அப்போது, எதிரே முந்திச் செல்ல முயன்ற வாகனங்கள் மீது மோதாமல் இருக்க, ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டுள்ளார்.
இதில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரம் இருந்த மரங்கள் மீது மோதி, பிறகு அங்கிருந்த 30 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து பெரும் விபத்துக்குளாகியுள்ளது.