ஹைதராபாத்:தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டி, உலகின் மிகப்பெரிய பிலிம் சிட்டி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தால் அங்கீகரிக்கப்பட்டது. சுமார் 2,000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்ட ராமோஜி பிலிம் சிட்டியில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல்வேறு இந்திய மொழிகளில் 2,500க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அதிலும், வருடத்திற்கு சுமார் 200 படக்குழுக்கள் ராமோஜி பிலிம் சிட்டியை முகாமிடுகின்றன.
இந்த நிலையில், நாட்டின் 78வது சுதந்திர தின விழா சிறந்த சுற்றுலாத் தலமாகவும் விளங்கும் ராமோஜி பிலிம் சிட்டியிலும் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்வின்போது, ஈநாடு நிர்வாக இயக்குனர் Ch. கிரோன் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.