டெல்லி:சென்னை, வாரணாசி, பாட்னா, ஜெய்ப்பூ உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள 41 விமான நிலையங்களுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் துபாய் நோக்கி புறப்பட இருந்த எமிரேட்ஸ் விமானம் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக நிறுத்தப்பட்டது.
பயணிகள் அனைவரும் நீண்ட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். தொடர்ந்து விமான தனிப்பட்ட இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஏறத்தாழ 13 மணி நேரம் தாமதத்திற்கு பின்னர் மீண்டும் விமானம் இயக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
சென்னை தவிர்த்து கோயம்புத்தூர், பாட்னா, வாரணாசி, நாக்பூர், ஜெய்ப்பூ, வதோதரா, ஜபலூர் உள்ளிட்ட விமான நிலையங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இமெயில் மூலம் வந்த மிரட்டலில் "ஹலோ, விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. சிறிது நேரத்தில் வெடிகுண்டு வெடித்து சிதற உள்ளது. நீங்கள் அனைவரும் உயிரிழக்கப் போகிறீர்கள்" என அந்த மிரட்டலில் குறிப்பிடப்பட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.