Video: ரயிலில் இருந்து தவறி விழுந்து மாணவர் உயிரிழப்பு - Video of a student who fell from a train
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15413539-thumbnail-3x2-trin.jpg)
திருவள்ளூர்: ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சென்னை மாநிலக் கல்லூரியில் பிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவர் நீதிதேவன் அதற்கு முன்னதாக சக நண்பர்களுடன் ஓடும் ரயிலில் சாகசம் செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 25ஆம் தேதியன்று நீதிதேவன் என்ற கல்லூரி மாணவர் சென்னையில் இருந்து வீடு திரும்புகையில், வேப்பம்பட்டு ரயில்வே நிலையம் அருகே ரயிலின் படிக்கட்டில் நின்று பயணம் செய்தபோது திடீரென அவரது கை நழுவி தண்டவாளத்தில் விழுந்ததை தொடர்ந்து, அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாமாக உயிரிழந்தார். அவர் இறப்பதற்கு முன் சக நண்பர்களுடன் ரயிலில் சாகச பயணம் மேற்கொண்ட வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.