பாலம் உடைந்து ஆற்றில் விழுந்தவரை போராடி காப்பாற்றிய பொதுமக்கள் - நீலகிரி
🎬 Watch Now: Feature Video
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த மங்குலி பகுதியில் மாணிக்கம் என்பவர் கடைக்கு சென்றுவிட்டு தன்னுடைய வீட்டிற்கு திரும்பி வரும்போது, ஆற்றுப்பாலம் வழியாக நடந்து வந்துள்ளார். தொடர் மழையினால் திடீரென்று பாலம் இடிந்து விழுந்தது. இதனால் நீரில் சிக்கி அடித்து செல்லும் நிலையில் இருந்த மாணிக்கத்தை அப்பகுதி பொதுமக்கள் ஒன்றுசேர்ந்து போராடி காப்பாற்றினார்கள். கூடலூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள ஆறுகளில் நீர் அதிகம் வருகிறது. எனவே பொதுமக்கள் பாதுகாக்க இருக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.