கொடைக்கானலில் கோடை விழாவில் 21ஆவது ஆண்டாக நடைபெற்ற நாய்க் கண்காட்சி! - 21 ஆவது வருடம் நாய் கண்காட்சி
🎬 Watch Now: Feature Video
கொடைக்கானல்: ’மலைகளின் இளவரசி’ என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் கடந்த 24ஆம் தேதி கோடை விழாவானது தொடங்கியது. கோடை விழாவில் பல்வேறு துறைகள் சார்பாக பல நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் முக்கிய நிகழ்வாக கால்நடை மற்றும் பராமரிப்புத்துறை சார்பாக நாய்கள் கண்காட்சி ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு 21ஆவது ஆண்டுக்கான நாய்க் கண்காட்சி நடைபெற்றது. இந்த நாய்க் கண்காட்சியில் ஜெர்மன் ஷெப்பர்ட், ராஜபாளையம், சிப்பிப்பாறை, பக், பொமேரியன், பிட்புள் உள்ளிட்டப் பல வகையான நாய்கள் பங்கேற்றன. இந்தப் போட்டியில் நாய்களுக்குப் பராமரிப்பு மற்றும் நடத்தைகளைப் பார்த்து பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் பரிசுகள் பெற்ற நாய்களுக்கு கால்நடை மற்றும் பராமரிப்பு துறை அலுவலர்கள் பரிசுகளை வழங்கினார்கள்.
Last Updated : May 30, 2022, 10:35 PM IST