தீயில் சிக்கிய குழந்தைகளை குழாயில் ஏறி காப்பாற்றிய ரியல் ஹீரோக்கள் - குழந்தைகளை குழாயில் ஏறி காப்பாற்றிய ரஷ்யர்கள்
🎬 Watch Now: Feature Video
ரஷ்யாவில் கோஸ்ட்ரோமா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. மூன்றாவது மாடியில் சிக்கித்தவித்த இரண்டு குழந்தைகளை காப்பாற்ற, உள்ளூர் வாசிகள் மூவர் குழாய் வழியாக ஒருவர் பின் ஒருவராக ஏறி நின்றுகொண்டனர். அவர்கள், ஜன்னல் வழியாக குழந்தை வாங்கி கீழே நின்ற அடுத்த நபரிடம் கொடுக்க, அவர் கீழே இருக்கும் நபரிடம் கொடுக்கிறார். தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள், தைரியமாக களத்தில் இறங்கிய உள்ளூர் வாசிகளை அப்பகுதி மக்கள் பாராட்டுகின்றனர்.
Last Updated : Jun 15, 2021, 12:45 PM IST