video:ரக்ஷாபந்தன் ஸ்பெஷல் ஸ்வீட் பாலுஷாஹி செய்முறை வீடியோ - raksha bandan celebration
🎬 Watch Now: Feature Video
வட இந்திய மாநிலங்களில் கொண்டாடுப்படும் ரக்ஷாபந்தன் விழாவிற்கு செய்யப்படும் ஸ்பெஷல் ஸ்வீட் பாலுஷாஹி செய்முறையை இந்த வீடியோவில் காணலாம். அரை கிலோ சர்க்கரை கொண்டு இதமான சூட்டில் பாகு காய்ச்சிக் கொள்ள வேண்டும். அதன்பின்னர் அரை கிலோ மைதா மாவுடன், 300 கிராம் நெய், சூடான நீர் மற்றும் தேவையான அளவு சோடா உப்பை கலந்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும். உருண்டைகளை கொதிக்கும் எண்ணெய்யில் போட்டு பொன் நிறமாக பொறித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் உருண்டைகள் ஆறிய பின் சர்க்கரை பாகில் 15-20 நிமிடங்கள் ஊற வைக்கவும். சுவையான பாலுஷாஹி தயார். இதனை உங்கள் வீட்டில் செய்து பார்த்து மகிழ்ச்சியுடன் உண்ணுங்கள்.