'பந்த பாசம் வளர' துடைப்பத்தால் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் திருவிழா! - தேனி
🎬 Watch Now: Feature Video
தேனி ஆண்டிப்பட்டி அருகே உள்ள மறவபட்டி கிராமத்தில் முத்தாலம்மன் கோயிலின் சித்திரை திருவிழாவின் கடைசி நாளில் அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் ஒருவருக்கொருவர் துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் விநோதமான நிகழ்ச்சி பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகிறது. அடிப்பதற்கு முன்பாக துடைப்பத்தை சாக்கடை நீரிலும், சேறு மற்றும் சகதியில் நனைத்துக் கொண்டும் மாமன், மைத்துனர்கள் மீது ஒருவருக்கு ஒருவர் அடித்துக்கொண்டனர். மேலும் சிலர் சேற்றிலும், சகதியிலும் படுத்துக்கொண்டு தங்கள் உறவினர்களிடம் துடைப்பத்தால் அடிவாங்கி கொண்டனர். நீண்டநாள் பிரிந்து வாழும் உறவுகள் திருவிழாவின் போது துடைப்பத்தால் அடித்துக்கொள்வதால் அவர்களுக்கிடையே மீண்டும் உறவு வளரும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாகவுள்ளது.