திருவள்ளூர் கனகம்மாசத்திரத்தில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீர் - பொதுமக்கள் அவதி - திருவள்ளூர் கனமழை பொதுமக்கள் அவதி
🎬 Watch Now: Feature Video
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு பெய்த மழையால் கனகம்மாசத்திரம் ரங்கசாமி தெருவில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்து மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இந்தத் தெருவில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். வீடுகளுக்குள் பாம்பு, தேள் போன்ற விஷ பூச்சிகள் வரும் அபாயம் உள்ளதாகவும், அலுவலர்கள் உடனடியாக இந்த பகுதியைப் பார்வையிட்டு வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.