கொள்ளிடத்தில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை - கொள்ளிடம் ஆறு
🎬 Watch Now: Feature Video
மயிலாடுதுறை: கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள அணைகளில் இருந்து அதிகப்படியான உபரி நீரானது தமிழ்நாடு பகுதிக்கு வந்து வண்ணம் உள்ளது. இந்நிலையில் மேட்டூர் அணை நிரம்பியதையடுத்து அணைக்கு வரும் 1.25 ஆயிரம் கன அடி நீரானது முழுவதுமாக கொள்ளிடம் ஆற்றின் வழியே திருப்பி விடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் திறக்கப்பட்ட தண்ணீரானது இன்று மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஆற்றின் வழியே சென்று பழையாறு அருகே கடலில் கலந்தது.