உத்தமர் கோயிலில் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு கொடியேற்ற விழா - திருமங்கையாழ்வார்
🎬 Watch Now: Feature Video
திருச்சி: மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார்கோவில் கிராமத்தில் திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்றதும், 108 திருப்பதிகளுள் ஒன்றானதும், திருக்கரம்பனூர், ஆதிமாபுரம் மும்மூர்த்திகள், முப்பெரும் தேவிகளும் குடிகொண்டிருக்கும் திருத்தலமாகவும் விளங்குகிறது, உத்தமர் கோயில். இங்கு புருஷோத்தம பெருமாளுக்கு ஆதியில் சத்கீர்த்திவர்த்தனன் என்கிற சோழ அரசரால் ஏற்படுத்தப்பட்ட சித்திரை பெருந்திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன் ஒரு பகுதியாக, இன்று (மே 06) கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டன. திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி வருகிற 14-ஆம் தேதி சனிக்கிழமை காலை 8 மணிக்கு நடைபெறுகிறது.