Video: ஏழுமலையானை தரிசித்த துர்கா ஸ்டாலின்... பலமான வேண்டுதலா இருக்குமோ..? - திருப்பத்தியில் துர்கா ஸ்டாலின்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15028310-thumbnail-3x2-durgastalin.jpg)
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் திருமலையில் ஏழுமலையானை இன்று தரிசனம் செய்தார். தமது குடும்ப உறுப்பினர்களுடன் திருமலை - திருப்பதிக்கு இன்று காலை சென்ற துர்கா ல்டாலின், சிறப்பு தரிசனப்பாதையில் சென்று சாமி தரிசனம் செய்தார். பின் ரங்கநாயகம் மண்டபத்துக்குச் சென்ற துர்கா ஸ்டாலினுக்கு, வேத பண்டிதர்கள் மந்திரங்கள் முழங்க தீர்த்த பிரசாதங்கள் வழங்கினர். இதனைத் தொடர்ந்து, வசந்த உற்சவத்தின் இரண்டாம் நாளான தங்கத் தேரோட்டத்திலும் துர்கா ஸ்டாலின் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.