Video: காரில் வந்து பூச்செடிகளைத் திருடிய டிப்டாப் ஜோடி - பசவங்குடி
🎬 Watch Now: Feature Video
கர்நாடகா(பெங்களூரு): பனசங்கரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பசவங்குடியில் காரில் வந்த ஜோடி ஒன்று சாலையோரம் வீட்டின் வெளியே வைக்கப்பட்டிருந்த பூச்செடி தொட்டிகளைத் திருடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. காரை நிறுத்திய பின் காரின் கண்ணாடியை சுத்தம் செய்வதுபோல, அந்த ஜோடியினர் பூச்செடிகளை லாவகமாகத் திருடி, காரில் வைத்த காட்சி அப்பகுதியிலிருந்த சிசிடிவியில் பதிவாகி இருந்தது. இந்நிலையில் தற்போது அக்காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.