சென்னை: மலையாள சினிமா மீது பெரிய மரியாதை உள்ளதாக நடிகை த்ரிஷா கூறியுள்ளார். டோவினோ தாமஸ், த்ரிஷா இணைந்து நடித்துள்ள ஐடென்டிட்டி (IDENTITY) திரைப்படம் கடந்த ஜனவரி 2ஆம் தேதி மலையாளம், தமிழ் மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படம் பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வெற்றி பெற்று வருகிறது.
தமிழகத்தில் குறைந்த எண்ணிக்கையிலான திரையரங்குகளில் வெளியானாலும், படத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்பால் தற்போது திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற IDENTITY திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நடிகர்கள் டொவினோ தாமஸ், த்ரிஷா, வினய், இயக்குநர்கள் அகில் மற்றும் அனஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் நடிகை த்ரிஷா பேசுகையில், ”எல்லோரையும் சந்தித்து பல நாட்கள் ஆகிவிட்டது. நான் பல படங்களின் புரமோஷன்களில் உங்களை சந்தித்துள்ளேன். ஆனால் முதல்முறை ஒரு மலையாள படத்தின் வெற்றிக்காக சந்திக்கிறேன், அது எனக்கு மிகவும் ஸ்பெஷல். Identity படக்குழுவினருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எனது கரியரில் எப்போதும் மலையாள சினிமா மீது ஒரு பெரிய மரியாதை உள்ளது.
ஏனென்றால் மலையாள சினிமா புத்திசாலித்தனமாகவும், வித்தியாசமாகவும் இருக்கும். நான் நிவின் பாலியுடன் hey jude திரைப்படம் நடித்தது முதல் வருடத்திற்கு ஒரு மலையாள படமாவது நடிக்க வேண்டும் என முடிவெடுத்தேன். அந்த நேரத்தில் இயக்குநர் அகில் மற்றும் அனஸை சந்தித்தேன். அதேபோல் டொவினோ தாமஸ் lucky star of kerala, அவர் படங்கள் தேர்வு செய்யும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது.
நடிகர் வினய்யும் நானும் ’என்றென்றும் புன்னகை’ படதில் நடித்தது முதல் நண்பர்களாக இருந்து வருகிறோம். இந்த படத்தில் வினய் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். Identity பட இயக்குநர்கள் அகில் மற்றும் அனஸை பார்க்க தான் சிரித்து கொண்டு இருப்பார்கள், ஆனால் அவர்க்ளிடம் வேலை செய்வது மிகவும் கடினம். மலையாள சினிமாவின் கதைகள், படங்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது, கதாபாத்திரம் வடிவமைக்கும் விதம் ஆகியவை நன்றாக இருக்கும்.
இதையும் படிங்க: நயன்தாராவிடம் ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டோமா? 'சந்திரமுகி' பட தயாரிப்பு நிறுவனம் விளக்கம்! - NAYANTHARA
Identity படத்திற்கு தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பு கிடைத்து, காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கேள்விப்பட்டேன். எப்போதும் மலையாளம் மற்றும் தமிழ் சினிமா ஒன்றோடு ஒன்று இணைந்து வேலை செய்வது போல இருக்கும். ஏனென்றால் மோகன்லால், மம்மூட்டி, நிவின் பாலி என அனைவருக்கும் தமிழ் சினிமா தொடர்பு உள்ளது. இங்கு தமிழ் சினிமா நடிகர்களும் அப்படி தான் இருக்கின்றனர். இந்த படத்தில் நடித்தது மகிழ்ச்சியாக உள்ளது” எனக் கூறியுள்ளார்.