ETV Bharat / state

பயணிகள் கவனத்திற்கு!.. முக்கிய ரயில்களின் எண்கள் மாற்றம் - நோட் பண்ணிக்கோங்க! - SOUTHERN RAILWAY

தாம்பரம் - நெல்லை புறப்படும் பொங்கல் சிறப்பு ரயிலின் நேரம் மற்றும் புவனேஸ்வர் செல்லும் முக்கிய ரயில்களின் எண்கள் மாற்றப்பட்டுள்ளதாகத் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில் கோப்புப்படம்
ரயில் கோப்புப்படம் (india rail info website)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 7, 2025, 7:36 AM IST

சென்னை: தாம்பரம் - திருநெல்வேலி பொங்கல் வாராந்திர சிறப்பு ரயிலின் நேரம் மற்றும் ராமேஸ்வரம், புதுச்சேரி, சென்னை சென்ட்ரலிலிருந்து புவனேஸ்வருக்குச் செல்லும் அதிவிரைவு ரயில்களின் எண்கள் மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் தொலைதூரப் போக்குவரத்துக்கு ரயில் பயணங்களையே நம்பியுள்ளனர். அந்த வகையில், ரயில் பயணிகளின் தேவைகளையும், குறைகளையும் ரயில்வே நிர்வாகம் பூர்த்தி செய்து வருவதுடன், எந்த ஒரு தகவல் என்றாலும் உடனுக்குடன் அப்டேட் செய்து வருகிறது. இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே.

தற்போது. தாம்பரம் - திருநெல்வேலி பொங்கல் வாராந்திர சிறப்பு ரயிலின் நேரம் மாற்றப்பட்டுள்ளதாகவும், புவனேஸ்வர் செல்லும் சில ரயில்களின் வண்டி எண் மாற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு ரயில் நேர மாற்றம்:

தாம்பரம் - திருநெல்வெலி பொங்கல் வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண் - 06091) புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு திங்கட்கிழமை பிற்பகல் 3.30க்கு புறப்பட வேண்டிய ரயில் ஒரு மணி நேரம் முன்னதாக, அதாவது பிற்பகல் 2.30க்கு தாம்பரத்திலிருந்து புறப்படும். அதேபோன்று மறுநாள் செவ்வாய்க்கிழமை திருநெல்வேலி சென்று சேரும் நேரம் காலை 4.55 மணி என்பதில் எந்தவித மாறுதலும் இல்லை.

முக்கிய ரயில்களின் எண்கள் மாற்றம்:

  • புவனேஸ்வர் - ராமேஸ்வரம் வாராந்திர அதிவிரைவு ரயில் (Bhubaneswar - rameswaram Weekly SF Express) 20896 என்ற பழைய எண்ணிலிருந்து 20849 என்ற புதிய எண்ணில் மார்ச் 7ஆம் தேதி முதல் இயக்கப்படும். ராமேஸ்வரம் - புவனேஸ்வர் வாராந்திர அதிவிரைவு ரயில் (Rameswaram - Bhubaneswar Weekly SF Express) 20895 என்ற பழைய எண்ணிலிருந்து 20850 என்ற புதிய எண்ணில் மார்ச் 9ஆம் தேதி முதல் இயக்கப்படும்.

இதையும் படிங்க: திருநெல்வேலி டூ காசி.. கும்பமேளாவுக்கு சிறப்பு ரயில் இயக்கம்! பயணக் கட்டணம் எவ்வளவு தெரியுமா?

  • புவனேஸ்வர்-புதுச்சேரி வாராந்திர அதிவிரைவு ரயில் (Bhubaneswar - Puducherry Superfast Express) 12898 என்ற பழைய எண்ணிலிருந்து 20851 என்ற புதிய எண்ணில் மார்ச் 4ஆம் தேதி முதல் இனி இயக்கப்படும். அதேபோல், புதுச்சேரி - புவனேஸ்வர் வாராந்திர அதிவிரைவு ரயில் (Puducherry - Bhubaneswar Superfast Express) 12897 என்ற பழைய எண்ணிலிருந்து 20852 என்ற புதிய எண்ணில் மார்ச் 5ஆம் தேதி முதல் இனி இயக்கப்படும்.
  • புவனேஸ்வர் - எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் வாராந்திர அதிவிரைவு ரயில் (Bhubaneswar - MGR Chennai Central SF Express) 12830 என்ற பழைய எண்ணிலிருந்து 20853 என்ற புதிய எண்ணில் மார்ச் 6ஆம் தேதி முதல் இயக்கப்படும். அதேபோல், எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - புவனேஸ்வர் வாராந்திர அதிவிரைவு ரயில் (MGR Chennai Central - Bhubaneswar SF Express) 12829 என்ற பழைய எண்ணிலிருந்து 20854 என்ற புதிய எண்ணில் மார்ச் 7ஆம் தேதி முதல் இயக்கப்படும்" என கிழக்கு கடலோர ரயில்வே அறிவித்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.