சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழா - விமரிசையாக நடந்த தேரோட்டம்.. - Sankaran Kovil Ther thiruvizha
🎬 Watch Now: Feature Video
தென்காசி: உலகப் புகழ்பெற்ற சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் ஆடித்தபசி திருவிழா ஜூலை 31ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் எட்டாம் நாளான இன்று (ஆக. 8) தேரோட்டம், சிவ வாத்தியங்கள் முழங்க வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா, சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவி உமா மகேஸ்வரி, தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ், துணை கண்காணிப்பாளர் சுதீர் ஆகியோர் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தவிர ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.