நடுரோட்டில் படுத்து முழக்கமிட்ட வடமாநில போதை ஆசாமி - இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது
🎬 Watch Now: Feature Video
கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் வடமாநில இளைஞர் ஒருவர் சாலையில் படுத்துக்கொண்டு பாரத் மாதா கி ஜே என முழக்கமிட்டார். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் ஒலி எழுப்பியும் எழுந்துசெல்லும்படி கூறியும் அந்த இளைஞர் எழுந்து செல்லாததால் அங்கிருந்த தனியார் நிறுவனங்களின் பாதுகாவலர்கள் அந்த நபரை எழுப்ப முயன்றனர். அப்போது அவர் குடிபோதையில் இருப்பது தெரியவந்தது. பின்னர் தனியார் நிறுவன பாதுகாவலர்களும், பொதுமக்களும் சேர்ந்து அந்த வடமாநில இளைஞரை எழுப்பிவிட்டு எச்சரித்து அனுப்பிவைத்தனர்.
Last Updated : Aug 12, 2022, 8:40 PM IST
TAGGED:
North State youth