Video: ரயிலில் மோதி இளைஞர் உயிரிழப்பு - young man died after hit by train
🎬 Watch Now: Feature Video
மும்பை:அதிவேகமாக வந்த ரயிலில் அடிபட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இறந்த இளைஞர் மகாராஷ்டிரா மாநிலம், துலே தாலுகா, வட்ஜாய் கிராமத்தைச்சேர்ந்த ராமேஷ்வர் தியோரே (25) என அடையாளம் காணப்பட்டது. 'அக்னிவீர்' ஆள்சேர்ப்புக்காக சென்ற அவர் புதன்கிழமை காலை, மும்பை செல்வதற்காக கல்யாணில் இறங்கியுள்ளார். அங்கு அவருக்கு வாந்தி வருவதுபோல் இருந்ததால் நடைபாதையில் இருந்து தள்ளிச்சென்று தண்டவாளத்தில் குனிந்துள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக வந்த ரயிலில் மோதி உயிரிழந்தார்.