காட்டு யானையை எதிர்த்து நிற்கும் காளை: வைரலாகும் வீடியோ - கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்
🎬 Watch Now: Feature Video
கிருஷ்ணகிரி: ஒசூரை அடுத்த தேன்கனிக்கோட்டை பகுதிகளில் காட்டு யானை ஒன்று விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து அட்டகாசம் செய்து வருகிறது. முன்னதாக அங்கு மேய்சலுக்காக வந்த மாடுகளை காட்டு யானை ஆக்ரோஷமாக விரட்டியது.
இதில் ஒரு காளை மாடு மட்டும் மிரண்டு போகமால் யானையை எதிர் கொண்டது. மேலும் தனது முன்னங்கால்களால் நிலத்தை கிளறியபடி எதிர்த்து நின்றது. யானையும் காளை மாடும் ஒன்றுக்கொன்று ஆக்ரோஷமாக போட்டி போட்டுக் கொண்டன.
பின் நீண்ட நேரம் கழித்து காட்டு யானை அங்கிருந்து சென்றது. இதனை மாடு மேய்க்கும் சிலா் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.