குடியிருப்பு பகுதியில் புகுந்த 4 அடி நீள நல்ல பாம்பு! - venomous snake caught by fire department
🎬 Watch Now: Feature Video
மயிலாடுதுறை மாயூரநாதர் கோவில் தெற்கு வீதியில் உள்ள ஒருவரது வீட்டில் சுமார் 4 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று இரவு நேரம் புகுந்தது. பாம்பினை கண்ட வீட்டு உரிமையாளர்கள் அலறி அடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்துள்ளனர். தொடர்ந்து அந்தப் பாம்பும் வெளியில் வந்து வாசலில் இருந்த மரத்தின் மீது ஏறியது. இதையடுத்து வீட்டு உரிமையாளர் மயிலாடுதுறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவலளித்தார். தகவலறிந்து வந்த மயிலாடுதுறை தீயணைப்பு வீரர்கள் பாம்பினை பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.