பாசமாக வளர்த்துவந்த கிளியைக் காணவில்லை: சோகத்தில் குடும்பத்தினர் - Video news
🎬 Watch Now: Feature Video
ராமநாதபுரம் மாவட்டம், கேணிக்கரையில் பாசமாக வளர்த்துவந்த கிளி நான்கு நாள்களாக காணாமல் போனதால், ஒரு குடும்பத்தினர் வீடுவீடாகச் சென்று நோட்டீஸ் கொடுத்து கிளியைத் தேடி வருகின்றனர்.
கிளியைக் கண்டுபிடித்து ஒப்படைத்தால், தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர். தாங்கள் பாசமாக வளர்த்த கிளியை நோட்டீஸ் அடித்து தேடிவரும் மனிதநேயமிக்க குடும்பத்தினரின் செயல் ராமநாதபுரம் மக்களை மனம் நெகிழச் செய்துள்ளது.