வகுப்பறையில் மாணவனைத் தாக்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம் - பணியிடை நீக்கம்
🎬 Watch Now: Feature Video
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணி பகுதியில் அமைந்துள்ள அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவனை ஆசிரியர் ஒருவர் தாக்கும் வீடியோ, சமூக வலைதளங்கிளில் வெளியானது. வீட்டு பாடம் எழுதி வரவில்லை எனக்கூறி, அப்பள்ளியின் வரலாற்றுத்துறை ஆசிரியர் திருலோகசுந்தரம் மாணவனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆசிரியர் திருலோகசுந்தரத்தை, உசிலம்பட்டி மாவட்ட கல்வி அலுவலர் ராகவன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.