தீபாவளி பண்டிகை: 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை...! - குரும்பை ஆடுகள்
🎬 Watch Now: Feature Video
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு ஆட்டுச்சந்தையில் சுமார் 3 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனை நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து, ஆட்டுச்சந்தைக்கு சுமார் 5000-திற்கும் மேற்பட்டவர்கள் ஆடு வாங்க வந்திருந்தனர். மேலும், திருப்புவனம் சுற்று வட்டாரத்தில் இருந்தும் மதுரை, திருச்சி போன்ற மாவட்டத்தில் இருந்தும், வெள்ளாடு, செம்மறி ஆடு, குரும்பை ஆடுகள் என 25ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன.