ஆபத்தான முறையில் பரிசலில் ஆற்றைக் கடக்கும் பொதுமக்கள்! - அம்மாபாளையம்
🎬 Watch Now: Feature Video
ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அம்மாபாளையம், ராக்கிணாம்பாளையம், கணேசன்புதூர் ஆகிய கிராமங்களில் இருந்து போதிய சாலை வசதி இல்லாததால் அந்த கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் ஆபத்தான முறையில் பரிசல் மூலம் பவானி ஆற்றைக் கடந்து செல்கின்றனர்.